இந்தியா

மருத்துவ கலந்தாய்வு... தொடரும் கனமழை... இன்றைய முக்கியச் செய்திகள்.!

webteam

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து. இரு தரப்பு உறவை மேம்படுத்த இணைந்து செயல்படபோவதாக உறுதி

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விரிவான ஏற்பாடுகள்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை. குற்றால அருவியில் பெருக்கெடுத்த வெள்ளம் கோயிலுக்குள் புகுந்தது

புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தகவல்

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் விளக்கம்

சட்டப்பேரவை தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேச மாட்டோம். கள எதார்த்தத்தின் அடிப்படையிலேயே தொகுதி ஒதுக்கீடு கோரப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்.

விருத்தாசலம் கிளை சிறையில் மரணமடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வேல்முருகன் புகார்.அக்டோபர் 29 ஆம் தேதி காவலர்களுடன் இருப்பவர் 30 ஆம் தேதி எப்படி வழிப்பறி செய்வார் என வீடியோ வெளியிட்டு கேள்வி

உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம்.காணொலியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

உறவினருக்கு கல்குவாரி ஒப்பந்தம் வழங்கிய புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று அமைச்சர் சிவி சண்முகம் சவால்.திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

அடிலெய்டு டெஸ்ட் திட்டமிட்டப்படி நடைபெறும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் உறுதி