இந்தியா

#TopNews கொரோனா முன்னெச்சரிக்கை; எம்.பி.யாகும் ரஞ்சன் கோகாய்... இன்னும் சில செய்திகள்!

webteam

தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வருகிற 31-ஆம் தேதிவரை மூட முதல்வர் உத்தரவு. 10, 11, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என அறிவிப்பு.

திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றையும் மூட உத்தரவு. வழிபாட்டுத் தலங்க‌ளில் அதிக அளவில் மக்கள் கூடவேண்டாம் என்றும் அறிவுறுத்தல்

ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், துருக்கியிலிந்து இந்தியா வரு‌வதற்கு மார்ச் 31-‌ஆம் தேதி வரை தடை. நாடு முழுவதும் பள்ளிகளை வருகிற 31-ஆம் தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு. மக்களின் ஆரோக்கியத்தை காக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி உறுதி

வரும் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு. கட்சி நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கும்படியும் நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

வருகிற 19-ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தம். கொரோனா அச்சத்தால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைப்பு. இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவு

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை ஒத்திவைக்க இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு வேண்டுகோள். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு தகவல்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம். ராமர் கோயில் வழக்கு, ரஃபேல் விமான பேரம், சபரிமலை உள்ளிட்ட வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர்.