இந்தியா

TopNews | அச்சுறுத்தும் கொரோனா... ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு; சில முக்கியச் செய்திகள்!

TopNews | அச்சுறுத்தும் கொரோனா... ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு; சில முக்கியச் செய்திகள்!

webteam

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு. டெல்லியை சேர்ந்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு.

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 773 பேர் கண்டறியப்பட்டனர். அவரவர் இருப்பிடங்களில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிப்பு

கொரோனா நோய்த்தொற்றுக்கான மையப்புள்ளியாகி விட்டது ஐரோப்பா. உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதனோம் வேதனை

அமெரிக்காவில் தேசிய அவசரநிலையை அறிவித்தார் அதிபர் ட்ரம்ப். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 50 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்திவைப்பு. இந்தியா - தென்னாப்ரிக்கா இடையிலான 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் தள்ளிவைப்பு

தமிழகத்தில் என்.பி.ஆர். பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல். சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் இன்று பேச்சுவார்த்தை. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் பற்றி விளக்கமளிக்க முதல்முறையாக அதிகாரப்பூர்வ சந்திப்பு

மைக்ரோசாஃப்ட் நிர்வாகக்குழுவில் இருந்து விலகினார் பில் கேட்ஸ். தலைமை செயல் அதிகாரி சத்திய நாதெள்ளாவின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்வார் என அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. ஒரு கோடியே 13 லட்சம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பலன்