மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசலால் கமல்நாத் அரசுக்கு சிக்கல். அரசை காக்கும் முயற்சியாக 20 அமைச்சர்கள் பதவி விலகினர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு. துபாயிலிருந்து புனே வந்த இருவருக்கு பாதிப்பிருப்பது உறுதியானது.
கொரோனா குறித்து மக்கள் அச்சமோ பதற்றமோ கொள்ள வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள். முக்கிய நகரங்களுக்கு வெளியே சிறப்பு வார்டுகளை அமைக்க முதல்வர் உத்தரவு
இருமல், சளி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் திருப்பதி வர வேண்டாம் என வேண்டுகோள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறும் அறிவுறுத்தல்
ஈரானில் கொரோனா வைரஸால் மேலும் 43 பேர் உயிரிழப்பு. சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு வருகிறது விமானப்படை
இத்தாலியில் கொரோனா கண்காணிப்பில் இருப்பவர்கள் வெளியே வந்தால் கைது. ஒன்றரைக் கோடி பேர் வீடுகளில் முடக்கம் - வெறிச்சோடிய சாலைகள், விமான நிலையங்கள்
அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தம்பிதுரை, கே.பி முனுசாமி போட்டி. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் வாய்ப்பு - தேமுதிகவுக்கு சீட் மறுப்பு
பெரு நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியதில் முறைகேடா? கடனை வசூலிக்காமல் இருக்க ரானா கபூருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா என அமலாக்கத்துறை விசாரணை
ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் பதவியேற்ற இரண்டு அரசியல் எதிரிகள். பதவியேற்பின்போது குண்டுவெடிப்பால் பதற்றம்