கொரோனா வைரஸை 'தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக' அறிவித்தது தமிழக அரசு. தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மீண்டும் கூட்டம்
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு. வெளிநாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கிறது மத்திய அரசு
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,500 ஆனது. ஐரோப்பாவில் மட்டும் 2 ஆயிரத்தை தொட்டது உயிரிழப்பு
கொரோனாவை தடுக்க அவசர கால நிதியாக இந்தியா சார்பில் 74 கோடி ரூபாய் வழங்கப்படும். சார்க் நாடுகளின் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
அனைத்து மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு. கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் இன்று முதல் 5-ஆம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா? கமல்நாத் அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை வேண்டும். மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சு.