இந்தியா

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

webteam

நாடு ‌முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.

புதிதாக இணைந்த ‌24 நகரங்‌களுடன் சேர்த்து 104 நகரங்‌களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட 8 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. எய்ம்ஸ், ஜிப்மர் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் நீட் தேர்வு மூலமே சேர முடியும்‌ என்பது குறிப்பிடத்தக்கது.