இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய தலைப்புச்செய்திகள்|ரமலான் கொண்டாட்டம்-இஸ்லாமியர் சிறப்பு தொழுகை To எலான் மஸ்க் இந்தியா வருகை!

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • தமிழ்நாட்டில் இன்று ரமலான் கொண்டாட்டம் காரணமாக அதிகாலை முதல் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை.

  • திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என கோவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.

  • வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற பிரதமர், தேர்தல் நெருங்குவதால் உள்நாட்டில் சுற்றுலா செல்வதாக முதலமைச்சர் விமர்சனம்.மேலும், அதிமுகவை அழிக்க இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் தினகரனே போதும் என்றும் பேச்சு.

  • மேகதாது அணை கட்டப்படாது என பிரதமர் மோடி உறுதி அளிக்க முடியுமா? என பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி.

  • நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக காணாமல் போகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

  • அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது.அதிமுக ஆயிரங்காலத்து பயிர் என்பது அண்ணாமலைக்கு தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில்.

  • தேர்தலை புறக்கணிக்கும் பகுதி மக்களிடம்,பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க வைக்க நடவடிக்கை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்.

  • சென்னையில் நடைபெற்ற பிரதமர் வாகனப் பேரணியில் தேர்தல் நடத்தை விதிமீறல் ஏற்பட்டதாக பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரில் 2 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு.

  • இந்தியாவின் முதல் எதிரி பிரதமர் மோடி என மதுரை பரப்புரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்.

  • திமுகவும், அதிமுகவும் தொலைநோக்கு பார்வை இல்லாத காலாவதியான கட்சிகள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.

  • முதலமைச்சர் ஆக்கியவர்களுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே,யார் பச்சோந்தி என்று உலகத்திற்கே தெரியும் என்று டிடிவி தினகரன் விமர்சனம்.

  • திமுக அரசில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

  • 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டில் எதுவும் வளர்ச்சியடையவில்லை என பொள்ளாச்சி பரப்புரையில் சீமான் குற்றச்சாட்டு.

  • மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.ஆகவே, நலத் திட்டங்கள் தொடர ஆதரவளிக்க ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேண்டுகோள்.

  • கடலூரில் திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அதிமுக நிர்வாகியின் இல்லத்தில் கணக்கில் வராத 10 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்.

  • மதுரையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலம்.

  • பரப்புரைக்காக நாளை தமிழகம் வருகிறார் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா.இந்நிலையில், சிவகங்கை, மதுரையில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

  • பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரிய பிரமாணப்பத்திரத்தை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம். ஆகவே, நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு ஏப்ரல் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு.

  • இந்தியாவுக்கு விரைவில் வருகிறார் எலான் மஸ்க்.இதன்படி, பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டம்.

  • ஹமாஸ் தலைவர் சென்ற கார் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், இஸ்மாயில் ஹனியேயின் 3 மகன்கள், 4 பேரக்குழந்தைகள் உயிரிழப்பு.

  • ரஷ்யாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்ததால் முடங்கிய மக்கள்.

  • நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான்.கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்று குஜராத் அணி அசத்தல்.

  • மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை.