இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|ரஷ்ய தலைநகர் மாஸ்கோ தாக்குதல்..!

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் ISIS பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால், 40 பேர் உயிரிழப்பு, 145-கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • ஆளுநரை வைத்து தமிழக அரசை பாஜக மிரட்டுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இந்நிலையில், பாஜகவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாகவும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

  • ராஜ்பவனிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளதாக ஆளுநரிடம் கூறினேன். ஆளுநரும் Best Of LUCK சொன்னதாக திருச்சி பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • உச்சநீதிமன்ற கண்டிப்பை அடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.இந்நிலையில், பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  • அமைச்சர் காந்தியின் வசமிருந்த கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • மகளிருக்கு மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும், நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.

  • 15 பெயர்களை கொண்ட இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.இதில், ராதிகா சரத்குமார், கே.பி.ராமலிங்கம், ஏ. பி.முருகானந்தம் உள்ளிடோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • பிரதமர் மோடி சொன்னதாலேயே தேர்தலில் போட்டியிடுகிறேன்.மேலும், கோவையிலேயே முதலமைச்சர் தங்கியிருந்து பரப்புரை செய்தாலும் பாஜகதான் வெல்லும் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

  • தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், விருதுநகரில் களமிறங்குகிறார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர்.

  • தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். மேலும், கடலூர் தொகுதியில் களம் காண்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

  • பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதனை, 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  • இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றதை அடுத்து, ஒன்றாம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.

  • ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே. இதன்காரணமாக, சென்னையிலிருந்து நாகர்கோயில் உட்பட பல்வேறு தடங்களில் 28 ரயில்கள் இயக்கப்படுகிறது.

  • இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

  • 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்,இதனால், இவ்வழக்கு விசாரணை மே மாதத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு புஷ்பக் விண்கலம் விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

  • புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்.இந்நிலையில், அரசமைப்பு விதிமுறைகளுட்பட்டு செயல்படவிருப்பதாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

  • கேரளாவில் தன்னை காண குவிந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய்.இதில், தமிழகமும், கேரளாவும் தனக்கு இரண்டு கண்கள் போன்றவை எனப் பேசியுள்ளார்.

  • நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில், பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.