இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|சிஏஏ குறித்து முதல்வர் திட்டவட்டம் To தனுஷ் தொடர்பான வழக்கு தள்ளுபடி

PT WEB
  • தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படியை 50 விழுக்காடாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளார்.இதன்மூலம், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிடம் டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. விரைவில் சென்னைக்கு அழைத்துவர போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

  • போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்திய நிலையில், போதைப்பொருள் விற்பனையகமாக தமிழகம் மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

  • குடியுரிமை திருத்தச்சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • குடியுரிமை திருத்தச் சட்டம் என்னவென்றே தெரியாமல் தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்க்கின்றன எனவும், எந்த மதத்தை சேர்ந்தவருக்கும் குடியுரிமை மறுக்கப்படவில்லை என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

  • சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் பாஜக பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.இதில், மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைப்பெற்றதாக தகவல்.

  • மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம் என பாஜகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

  • பாஜக கூட்டணி மூலம் தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • பாரதிய ஜனதா கட்சியில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார். இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கமளித்துள்ளார்.

  • பொள்ளாச்சியில் இன்று புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில்பாலாஜியின் மறு ஆய்வு மனுஇன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

  • பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அரசமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.

  • மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அவதூறு பேசியதாக சர்ச்சை எழுந்தநிலையில், பாஜகவின் குஷ்புவை கண்டித்து பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

  • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு மொழித்தேர்வை தங்களது தாய் மொழியில் எழுதலாம் என தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • திருப்பூர் வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் அதிமுக நிர்வாகி உட்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • சென்னை கேளம்பாக்கம் நகைக்கடையில் போலி ஹால்மார்க் முத்திரை கொண்ட சுமார் ஒன்றேகால் கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் தவறான உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

  • தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என கர்நாடக துணை முதலமைச்சரை தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையாவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

  • சுயேச்சைகள் ஆதரவுடன் ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜகவின் நயப்சிங் சைனி.இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

  • இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது,இந்நிலையில், காங்கிரஸ் கமல்நாத் மகன் நகுல் நாத் மத்தியப்பிரதேசத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட் களமிறங்குகிறார்.

  • பழங்குடியினரின் நலனுக்காக 6 தீர்மானங்களை அறிவித்த ராகுல்காந்தி.வனப் பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களில் பாஜக அரசு செய்த அனைத்து திருத்தங்களும் திரும்பப் பெறப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

  • வாக்கு வங்கி அரசியலுக்காக சிஏஏ சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலியால் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது பாரத ஸ்டேட் வங்கி.

  • 6 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள் மெக்சிகோ வளைகுடா பகுதியில் பத்திரமாக தரையிறங்கினர்.

  • அர்ஜெண்டினா தலைநகரை புரட்டிப் போட்ட கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தனித்தீவாக காட்சியளித்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

  • ரிஷப் பந்த் ஐ.பி.எல் தொடரில் களமிறங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகவே,தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

  • மகளிர் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு. எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்.