2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று குவைத் செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு சென்று முக்கிய தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார்.
நாடாளுமன்ற நுழைவுவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரத்தில், ராகுல் காந்தி மீதான வழக்கு டெல்லி குற்றப் பிரிவு காவல்துறைக்கு மாற்றம்.
நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு. கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
நடிகர்களின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்... பாசிட்டிவ்வாக பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை. இந்தவிவகாரத்தில், 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.
திமுக அரசுக்கு நிர்வாகத் திறன் துளியும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். இதற்கு, சட்டம் ஒழுங்கு குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என அமைச்சர் ரகுபதி பதில்.
கோவையில் தடையை மீறி பேரணியாகச் சென்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. பேரணியில் பங்கேற்ற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கைது செய்தது காவல் துறை.
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல என ஆய்வு மேற்கொண்ட பின்னர் கேரள அரசு அதிகாரிகள் விளக்கம்.
பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவில், யுஜிசி உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அறிவுறுத்தல்.
துணைவேந்தர் காலியிடங்களை நிரப்ப ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது வேதனையளிப்பதாக அமைச்சர் கோவி செழியன் அறிக்கை. துணைவேந்தர் நியமன விவகாரத்தை அரசு, சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்றும் உறுதி..
ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழாவை தொடங்கிவைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. 5 நாட்கள் நடைபெறும் விழாவில் 45 அரங்குகளில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 3 முறை பதவியேற்பு விழா கண்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றம். உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் ஊராட்சி மன்ற தலைவரானார் தேவி மாங்குடி.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாரச்சந்தைக்கான ஏலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில், நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொப்பரைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல். சீவல் கொப்பரை விலை குவிண்டாலுக்கு 422 ரூபாய் உயர்த்தப்பட்டு 11 ஆயிரத்து 582 ரூபாயாக நிர்ணயம்.
அரசியல் கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தல். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமியின் பந்துவீச்சை பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர். ஜாகீர் கான் போன்று சிறுமி பந்துவீசுவதாக புகழாரம்.