நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்பான பாஜகவினர் புகாரில், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து டெல்லி காவல் துறை நடவடிக்கை.
அமித் ஷாவுக்கு எதிரான போராட்டத்தை திசைத்திருப்பவே ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. காங்கிரஸ் எம்பிக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி.
நாடாளுமன்ற நுழைவாயிலில் போராட்டம் நடத்தத் தடை. இந்நிலையில், நுழைவாயிலில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு.
ஈரோட்டில் திமுக நிர்வாகிகளிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திமுக வலுவாக இல்லாத தொகுதிகளில் கட்சியை பலப்படுத்த அறிவுறுத்தல்.
மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக கூறிய முதலமைச்சர்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், திமுக அரசு தொடங்கிவைக்க மறுக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
எதிலாவது அரசியல் செய்து பெயர் எடுக்க எடப்பாடி பழனிசாமி துடித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.
மருத்துவக் கழிவு குறித்த இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு, அதிமுக ஆட்சியில்தான் அதிக கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டதாக பதில்.
மருத்துவக் கழிவுகள் விவகாரம் தொடர்பாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்.
தமிழ்நாட்டில் கழிவுகளை கொட்டுவது பற்றி கேரள அரசுக்கு வழிகாட்டுதல்களை அளிக்க கோரிக்கை.
நெல்லையில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தில், 2 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழப்பு.இந்நிலையில், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.
தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து அவதூறாக பேசியதாக, புதிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது. கைது செய்ததற்கான நகலை, மதுரை சிறையில் உள்ள சங்கரிடம் கொடுத்தனர் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேரிட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.மேலும், நிலக்கரிகளை தேக்கி வைக்கும் பங்கர் சரிந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
96 வயதில் உயிரிழந்த மூதாட்டியை ஆடல், பாடலுடன் வழி அனுப்பி வைத்த பேரன், பேத்திகள். கடைசி ஆசையை திருவிழாக் கோலமாக நிறைவேற்றிய சுவாரஸ்யம்.
நாட்டுக்காக உழைத்த தனக்கும், லலித் மோடிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தொழிலதிபர் விஜய் மல்லையா எக்ஸ் வலைத்தளத்தில் ஆதங்கம்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதை வென்றது அமரன். லப்பர் பந்து திரைப்படத்திற்கு 2ஆம் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஜா படத்திற்காக சிறந்த நடிகர் விருதை வென்றார் விஜய் சேதுபதி. அமரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சாய் பல்லவிக்கும் விருது.
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்று ரிலீஸ். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா vs இந்தியா என்ற நிலை வர வேண்டும் என தமிழக இளம் வீரர் குகேஷ் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.