Headlines Facebook
இந்தியா

Headlines|புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு To அமித்ஷாவின் பேச்சுக்கு எகிறும் கண்டனம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு To அமித்ஷாவின் பேச்சுக்கு எகிறும் கண்டனம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம். அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்.

  • அம்பேத்கரை முழுமையாக மதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து.இந்நிலையில், தனது 11 நிமிட காணொளியை மட்டுமே வெளியிட்டு காங்கிரஸ் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாக அமித் ஷா குற்றச்சாட்டு.

  • அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

  • அம்பேத்கர் இல்லாவிட்டால், பிரதமர் மோடி இன்றும் தேநீர் விற்க நேரிட்டிருக்கும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காட்டம்.

  • அமித் ஷாவின் பேச்சால் பாஜக பின்விளைவுகளை சந்திக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

  • அம்பேத்கரை நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்.

  • அமித் ஷாவின் கருத்து பாஜகவின் பழைய சித்தாந்தத்தையே வெளிப்படுத்துவதாக அம்பேத்கரின் கொள்ளுபேரன் பிரகாஷ் அம்பேத்கர் விமர்சனம்.

  • அம்பேத்கரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தவெக தலைவர் விஜய் கண்டனம்.

  • அமித் ஷா பேச்சை காங்கிரஸ் திரித்து விட்டதாக மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு.

  • அம்பேத்கர் குறித்து அமித் ஷா தவறாக ஏதும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்.

  • ஒரேநாடு; ஒரே தேர்தல் மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றார் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி.மேலும், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், மணிஷ் திவாரி உள்பட மொத்த 21 பேர் தேர்வு.

  • இந்தியா - சீனா இடையே மீண்டும் மானசரோவர் யாத்திரை, எல்லை வர்த்தகம் தொடங்க ஒப்புதல். சீன துணை அதிபரை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்த நிலையில் இரு தரப்பு உறவில் முன்னேற்றம்.

  • அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்.

  • சிறுபான்மையின மக்களுக்கு திமுக அரசு என்றும் அரணாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. சிறுபான்மையினரின் நலனை காக்க திராவிட மாடல் அரசு முனைப்பு காட்டி வருவதாகவும் பேச்சு.

  • எழுத்தாளர் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு. திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் என்ற ஆய்வு நூலுக்காக விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

  • ஜமைக்காவில் வர்த்தக வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நெல்லையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை தாயகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு.

  • மண்டல பூஜை நெருங்கும் நிலையில் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். இந்நிலையில், 18 ஆம் படியில் அதிக பக்தர்களை ஏற்றி தரிசனத்தை விரைவுப்படுத்த காவல் துறை ஏற்பாடு.

  • மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டி வருவதற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுவரை கொட்டப்பட்ட மொத்த கழிவுகளை அகற்றுவதற்கான செலவுகளை கேரள அரசிடமே வசூலிக்குமாறும் தமிழக அரசுக்கு ஆணை.

  • மும்பையில் நடுக்கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு.

  • அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு. பதிலுக்கு இந்திய பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கப் போவதாகவும் எச்சரிக்கை.

  • புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாக மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டது ரஷ்யா. புத்தாண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.

  • 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் இந்திய வீரர் அஸ்வின். சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பு.