ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்றைக்கு பதில் நாளை அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல். நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பவும் திட்டம்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக. அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேச்சு .200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் பகல் கனவு நிறைவேறாது என்றும் விமர்சனம்.
அதிமுகவின் கட்டுக்கதைகளை மக்கள் நம்பப்போவதில்லை என்றும், இட்டுக்கட்டிய பொய்களையே இபிஎஸ் எழுதி நிரப்பியிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு.ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் அரசியல் பயணம் தொடரும் என்றும் விளக்கம்.
ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்து, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிரானதாகவே இருந்தது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.
திமுக கூட்டணியில் இருந்து விசிகவை பிரிப்பதே ஆதவ் அர்ஜுனாவின் செயல்திட்டமாக இருந்தது என புதிய தலைமுறையின் சிறப்பு நேர்காணலில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு.
ஓட்டுக்கு காசு கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
திமுக ஆட்சியில் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி.
நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு. தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தகவல்.
புதுச்சேரியில் அரசு சொத்தை விலை பேசியதாக வெளியான தகவல்களுக்கு திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு. தன்னைப் பற்றி வெளியான மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ் நகைச்சுவையாக இருந்ததாகவும் கருத்து.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் மோகன்பாபு. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை தாக்கியது துரதிருஷ்டவசமானது என்றும் பேச்சு.
வீணாக்கப்பட்ட நீரில் போலியோ வைரஸ் இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு. போலியோ தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாதவர்களுக்கே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்றும் தகவல்.
சையது முஷ்தாக் அலி கிரிக்கெட் தொடரை 2வது முறையாக வென்றது மும்பை அணி. இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது.
மகளிர் ஜுனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி. சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.