அமெரிக்க தேர்தல் நடைமுறைகளுக்கு இந்தியா நிதியுதவி செய்யலாம் என அதிபர் ட்ரம்ப் பேச்சு... அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்து இந்தியா பயனடைவதாகவும் விமர்சனம்...
நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் நிதி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டது... மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்...
ஸ்பெயினில் கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித்தின் கார் விபத்து... அஜித்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல்...
ராகுல்காந்தி பெரியாரின் பேரனாக செயல்பட்டு வருவதாக திமுக எம்.பி ஆ. ராசா புகழாரம்... மத்திய அரசை எதிர்க்க மீண்டும் பெரியார் வழியை எடுக்க வேண்டிய தேவை உருவாகி உள்ளது என்றும் பேச்சு...
தாய்மாமன் சீர் போல மாதந்தோறும் மகளிருக்கு முதல்வர் சீர் செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்... வலிந்து போய் ‘அப்பா’ என்று முதல்வர் பிராண்ட் செய்யலாமா என சீமான் கேள்வி...
கர்நாடகாவில் மொழிப் பிரச்சினையால் இருமாநில ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்... கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையே பேருந்து சேவை நிறுத்தம்... பயணிகள் அவதி...
தெலங்கானாவில் கட்டுமான பணியின் போது சுரங்கம் இடிந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 8 பேரை மீட்கும் பணி தீவிரம்...
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்... நிமோனியா பாதிப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்...
சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி... ஜோஸ் இங்கிலீஷின் அதிரடி சதத்தால் இமாலய இலக்கை எட்டிப்பிடித்து அசத்தல்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை... சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிரம்மாண்ட திரைகளில் போட்டியை கண்டுகளிக்க ஏற்பாடு...