நாடெங்கும் 72ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம். டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு. 50 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காத குடியரசு தின விழா.
வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி இன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள்.அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு. கடும் நிபந்தனைகள்.
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருதும் பாடகி சித்ராவுக்கு பத்மபூஷண் விருதும் அறிவிப்பு. சாலமன் பாப்பையா, ஸ்ரீதர் வேம்பு, சுப்பு ஆறுமுகம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ரத்து. ஜனநாயகத்தின் குரல்வளையை அதிமுக அரசு மீண்டு்ம் ஒரு முறை நெரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்.
பொது மக்களுக்கான தமிழக அரசின் உதவி மைய திட்டம் அடுத்த மாதம் முதல் தொடக்கம். தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம். நமச்சிவாயம் உள்ளிட்ட 2 எம்எல்ஏக்கள் விலகியதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என புதுச்சேரி முதலமைச்சர் பேட்டி
சசிகலா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை. கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அறிவிப்பு.