இந்தியா

போலியோ சொட்டு மருந்து முகாம்.. சசிகலா டிஸ்சார்ஜ்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

போலியோ சொட்டு மருந்து முகாம்.. சசிகலா டிஸ்சார்ஜ்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

webteam

அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும் எனவும் வேண்டுகோள்.

நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம். தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு தர இலக்கு.

மதுரை அருகே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ராணிப்பேட்டை பரப்புரை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.

கொரோனா அறிகுறிகள் குறைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் சசிகலா. பெங்களூரில் தங்கும் சசிகலா சில நாட்களுக்குப் பிறகு தமிழகம் திரும்புவார் என தகவல்.

தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவை இன்று விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தகவல். அதிமுக கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என்றும் பேச்சு.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் அரசு தயாராகவே உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறதா சட்டப்பேரவைத் தேர்தல்? திருச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மகாத்மா காந்தி சிலை சேதம். காந்தியின் நினைவு நாளில் நிகழ்த்தப்பட்ட அவமதிப்புக்கு இந்தியா கடும் கண்டனம்.