இந்தியா

தைப்பூசம் கொண்டாட்டம்.. ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

webteam

டெல்லி வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து உள்ளிட்டோர் மீது வழக்கு. விவசாய சங்கத் தலைவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க காவல்துறை நோட்டீஸ்.

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் இன்று வெகுவிமரிசையாக கொண்டாட்டம். விடுமுறை தினம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவர் என எதிர்பார்ப்பு.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் திறந்து வைக்கின்றனர் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி. பெரும்பான்மையுடன் வெற்றி பெற சபதமேற்க அதிமுகவினருக்கு அழைப்பு.

பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்புடன் மேலும் தளர்வு. திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக பார்வையாளர்களுக்கு அனுமதி.

சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி, மகனைக் கொன்று 17 கிலோ தங்கம் கொள்ளை. காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் ஒருவர் உயிரிழப்பு. நான்காவது நபரும் கைது.

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் அல்ல என பிரேமலதா கருத்து. சசிகலா அரசியலுக்கு மீண்டும் வரவேண்டும் என்றும் அழைப்பு.

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி சென்னை வருகை. 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் பயிற்சியை மேற்கொள்ள திட்டம்.