பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்புப் பணியில் 10,000 காவலர்கள் குவிப்பு. போக்குவரத்து மாற்றம்.
தமிழகத்தில் 7 பட்டியலின உட்பிரிவு மக்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வழி செய்யும் சட்டத்திருத்த மசோதா. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
சிவகாசியில் வெடிவிபத்து நிகழ்ந்த ஆலையில் அளவுக்கு அதிகமான பணியாளர்கள் இருந்தது விசாரணையில் அம்பலம். குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஆலை 4 பேருக்கு அடுத்தடுத்து உள்குத்தகைக்கு விடப்பட்டதாக தகவல்.
கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரே நாளான பெண் குழந்தை கடத்தல். புதுச்சேரிக்கு தூக்கிச் சென்ற இளம்பெண் கைது.
விவசாயிகளுக்கு பயிர்கடன் ரத்து செய்ததற்கான ரசீது வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. கீழடி உள்ளிட்ட 4 பகுதிகளில் அகழாய்வு பணிகளையும் தொடங்கி வைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். பரப்புரை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி.
தஞ்சையில் வீட்டின் ஓட்டைப் பிரித்து இரட்டை பெண் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றதாக புகார். ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை காயத்துடன் மீட்பு.
குடியரசு தின வன்முறை தொடர்பாக உயர்நிலை விசாரணை தேவை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாய அமைப்புகள் கோரிக்கை.
இங்கிலாந்து எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 161 ரன்கள் விளாசி அசத்தல்.