இந்தியா

பேரறிவாளன் விடுதலை விவகாரம்; இளவரசி விடுதலை; இன்னும் சில முக்கியச் செய்திகள்

பேரறிவாளன் விடுதலை விவகாரம்; இளவரசி விடுதலை; இன்னும் சில முக்கியச் செய்திகள்

webteam

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது. தமிழக ஆளுநரின் கடிதத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்.

7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி. ஆளுநரின் முடிவு மக்களை அவமதிப்பது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து.

திமுக ஆட்சி வந்ததும் 7 பேர் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும். பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை தடுக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் புகார்

சசிகலா வருகிற 8ஆம் தேதி தமிழகம் வருவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு. காலை 9 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவதாக டிவிட்டரில் தகவல்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகிறார் இளவரசி. காலை 11 மணி அளவில் விடுவிக்கப்படுவார் எனத் தகவல்.

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.க்கள் தடுத்துநிறுத்தம். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் டிவிட்டரில் பிரபலங்கள் மோதல்.

தெப்பக்காடு முகாமுக்கு அழைத்துச் செல்லும் வழியில் யானை "ரிவால்டோ" மிரண்டு ஓட்டம். மற்றொரு யானையின் நடமாட்டத்தை அறிந்ததால் அச்சத்தில் காட்டுக்குள் தப்பியதாக வனத்துறை தகவல்

சென்னையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் காலையில் தொடங்குகிறது. போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்குவார் என்று கேப்டன் விராட் கோலி பேட்டி