இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்...!

இன்றைய முக்கியச் செய்திகள்...!

webteam

மகாராஷ்ட்ராவில் பாரதிய ஜனதா ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பிய பாஜக. குதிரைபேரத்தை தடுக்க சொகுசு விடுதியை மாற்றிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.

யார் கட்சி தொடங்கினாலும் கவலையில்லை என அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு. அதிமுகவில் வெற்றி இருக்கிறது - வெற்றிடம் இல்லை என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்படுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம். பிரதமர் மோடி தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தல்

தனது அறிவுறுத்தலின்படியே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு. நாவடக்கத்துடன் பேச வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு சம்மன். டிசம்பர் 2ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை ஆணை.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்றது இந்தியா. தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று உலக சாதனை.