இந்தியா

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முதல்... இந்தியா vs நியூசி., இரண்டாவது ஒருநாள் போட்டி வரை...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முதல்... இந்தியா vs நியூசி., இரண்டாவது ஒருநாள் போட்டி வரை...

webteam

டெல்லி சட்‌டப்பேரவைக்கு காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு. சுமார் ஒன்றரை கோடி மக்கள் வாக்களிக்கத் தயார் நிலையில் ஏற்பாடுகள்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 14ஆம் தேதி தொடக்கம். முதல் நாளில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததால் புதிய மாற்றங்களை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி.‌ தேர்வெழுத ஆதார் கட்டாயம். தேர்வு மையத்தை ஆணையமே முடிவு செய்யும்.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சரணடைந்த ஜெயக்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி. பிரதான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் 100 பேர் விசாரணை வளையத்தில் வருகின்றனர்.

கேரள பட்ஜெட் உரையின் முகப்பு பக்கத்தில் காந்தி கொலையை சித்தரிக்கும் படம். காந்தியை கொன்றவர்களை மறக்கமாட்டோம் என கேரள அமைச்சர் பேட்டி.

பிகில் திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் விடிய விடிய வருமான வரித்துறை சோதனை. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை இரண்டு பைகளில் எடுத்துச் சென்ற அதிகாரிகள்.

என்.எல்.சி.யில் மாஸ்டர் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து பாஜகவினர் போராட்டம். விஜய்க்கு ஆதரவாக திரண்ட அவரது ரசிகர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் பரபரப்பு.

இந்தியா - நியூசிலாந்து இடையே ‌இன்று‌‌‌ இரண்டா‌வது ஒருநாள் கிரிக்கெட்‌ போட்டி. மு‌‌தல் ‌ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா விராட் படை.