ஞானேஷ் குமார், விஜய்+ pt web
இந்தியா

HEADLINES | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விஜய் முதல் S.I.R பணிகள் அறிவிப்பு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்தித்தது முதல் இரண்டாம் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தை அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB
  • 21 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை அறிவித்தது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் இன்றிரவு முதல் நிறுத்தம். இனி S.I.R. மூலம் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

#JUSTIN | வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
  • வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை. சட்டரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்திருந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சு.

  • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு அதிமுக வரவேற்பு. முறையாகவும், வெளிப்படையாகவும் பணிகளை மேற்கொள்ள அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் சதி இருப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார்.

புயல்,, மாதிரிப்படம்
  • சென்னைக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மோன்தா புயல். நாளை இரவுக்குள் தீவிரப்புயலாக மாறி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இந்நிலையில், மோன்தா புயலால் ஆந்திரா, ஒடிசாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்... திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வானிலை
    மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை...

கனமழை எச்சரிக்கை
  • தமிழகம் முழுதும் பரவலாக மிதமான முதல் கனமான மழை பெய்து வரும் நிலையில், சென்னை வியாசர்பாடியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... எத்தகைய மழையையும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் என பேட்டியளித்துள்ளார்.

  • கன்னியாகுமரியில் மழை விட்ட பிறகும் ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவி... பேச்சிப்பாறை அணையில் இருந்து 2ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம்
  • திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார பெருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, சூரபத்மனை வதம்செய்தார் முருகப் பெருமான்... சூரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி அரவணைத்தார் முருகன்... திருச்செந்தூர் கடற்கரையைப் பிளந்த அரோகரா கோஷம்..

பிஹாரில் நாளை மறுநாள் பரப்புரையைத் தொடங்குகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி... முஸாஃபர்பூர், தர்பங்காவில் நடைபெறும் கூட்டங்களில் தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தி

திமுகவும் காங்கிரஸும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே அணியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன... தனிநபர் நலனை விட நாட்டின் நலனே முக்கியம் என்றும் முதல்வர் அறிவுரை.

இன்று, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் கூறினார் தவெக தலைவர் விஜய்... அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விஜய், கரூர்

தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தலைமைச் செயலர்கள் ஆஜராக வேண்டும்... தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் வரும் 3ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 400 குறைந்து 91,600 ரூபாய்க்கு விற்பனை... ஒரு கிராம் தங்கத்தின் விலை 11ஆயிரத்து 450ஆக குறைந்துள்ளது.

தங்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது போட்டியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி. இந்நிலையில், உடல்நிலை சீராக இருப்பதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.