இந்தியா

மத்திய பிரதேசத்தில் ஆட்சி நிலைக்குமா? இன்று முடிவு

மத்திய பிரதேசத்தில் ஆட்சி நிலைக்குமா? இன்று முடிவு

webteam

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி நிலைக்குமா என்ற கேள்வியோடு மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியும் நிலைக்குமா என்ற கேள்விக்கும் இன்று விடை கிடைக்க உள்ளது

பீகார் தவிர பிற 11 மாநிலங்களில் உள்ள 58 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு பாஜக குறைந்தது 8 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.

இங்கு ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜகவுக்கு மாறினர். ராஜினாமா செய்தவர்கள் இம்முறை பாஜக சார்பில் களமிறங்கியிருந்தனர். இது தவிர உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகளும் யோகி ஆதித்யநாத் அரசின் மீது மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும். இவை தவிர குஜராத்தில் 8, மணிப்பூரில் 4, கர்நாடகாவில் 2 தொகுதிகள் உட்பட 24 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.