கர்நாடக அரசு போட்ட உத்தரவு முகநூல்
இந்தியா

தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 30% மதிப்பெண் எடுத்தாலே போதும்; கர்நாடக அரசு போட்ட உத்தரவு!

மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்து, அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்வதற்கு உதவும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

PT WEB

கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு மாணாக்கருக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 30 சதவீத மதிப்பெண் எடுத்தாலே போதும் எனவும், ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 33 சதவீதமாக இருந்தாலே போதும் எனவும், அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால், 100க்கு 30 மதிப்பெண் எடுத்தாலே, அந்த மாணவர் தேர்ச்சியடைந்துவிடுவார். மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்து, அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்வதற்கு உதவும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.