ஏப்ரல் 7-ம் தேதி முதல் திருப்பதியில் விஐபி சிபாரிசு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7-ம் தேதி முதல் 10 வாரங்களுக்கு எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், விஐபிக்களுக்கான தரிசன டிக்கெட்டில் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது.