இந்தியா

குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி: 13பேர் மீது வழக்குப்பதிவு

குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி: 13பேர் மீது வழக்குப்பதிவு

Rasus

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில், சாதிய பாகுபாட்டால் தமிழக மாணவர் தற்கொலைக்கு முன்றது தொடர்பாக ‌பேராசிரியர்கள் 9 பேர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் தமிழக மாணவர் மாரிராஜ், தலித் என்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பேராசிரியர்கள் அனுமதி மறுத்தாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மாரிராஜ் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், விரக்தியடைந்த மாணவர் மாரிராஜ், விடுதியில் தூக்க மாத்திரைகளை அதிகளவில் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்துள்ள புகாரை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்நிலையில் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர்கள் 9 பேர் உள்பட மொத்தம் 13 பேர் மீது அஹமதாபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.