இந்தியா

டெல்லி எய்ம்ஸில் தமிழக மாணவர் சடலம் மீட்பு

டெல்லி எய்ம்ஸில் தமிழக மாணவர் சடலம் மீட்பு

rajakannan

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ் படித்து வந்தார். நண்பர்களுடன் அறையில் தங்கி வந்துள்ளார். மாணவர் சரத்பிரபு இன்று கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சக மாணவர்கள் அவரது சடலத்தை பார்த்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.

மாணவர் சரத்பிரபுவின் சடலத்தை கைப்பற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவறையில் தனக்கு தானே இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டு சரத்பிரபு இறந்துவிட்டதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்த தமிழக மாணவர் சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு விஷ ஊசி போட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழக மாணவர் ஒருவர் இறந்துள்ளது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.