மணிப்பூர் வன்முறை - தமிழ்நாடு காவலர் காயம் புதிய தலைமுறை
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்; காயமடைந்த தமிழ்நாட்டு காவலர்!

மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி காயம் அடைந்தார்.

PT WEB

மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி காயம் அடைந்தார்.

காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகர்

காங்போக்பி மாவட்டத்தில் குக்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில், அங்கு பணியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் மனோஜ் பிரபாகருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் சில காவலர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.