வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை அறிய இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகம் திரும்ப விரும்புவோரின் விவரங்களை அறியவும், வசதி செய்யப்பட்டிருக்கின்றன.