இந்தியா

குஜராத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!

குஜராத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!

webteam

ஒகி புயலால் குஜராத் மாநிலம் வேரவல் துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குஜராத் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை வாயிலாக தெரிந்துகொண்ட தமிழக அதிகாரிகள், குஜராத் அதிகாரிகளுடன் பேசி மீனவர்கள் கரை ஒதுங்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், கரை ஒதுங்கிய தங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

அத்துடன் கடும் குளிரில் வாடுவதாகவும், படகிலேயேதான் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். போதிய இட வசதி இல்லாததால் குஜராத் படகுகள் மோதி, தமிழர் படகுகள் சேதமடைவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் படகுகளுடன் திரும்புவதற்கான எரிபொருள் இல்லை என கவலையடைந்துள்ள தமிழக மீனவர்கள், ஊர்த் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.