டெல்லி ஜந்தர் மந்தரில் மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் வைத்து தமிழக விவசாயிகள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கிக்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 5-வது நாளாகப் போராடி வருகின்றனர். நேற்று தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்ட விவசாயிகள், இன்று மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 41 நாட்கள் நடத்திய தொடர் போராட்டதுக்கு பிறகு போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்ட விவசாயிகள், இரண்டாவது கட்டமாக மீண்டும் போராடி வருகின்றனர்.