எல்லைத் தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழக மீனவர்களை கடுமையாக பாதிக்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பதில், இந்த புதிய சட்டம் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். பாரம்பரியமாக மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீனவர் எல்லை தாண்டுவதாகக் கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பிரதமரை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.