சோதனை நடத்தப்பட்ட நிறுவனம், திருப்பதி லட்டு தயாரிப்பு pt web
இந்தியா

திருப்பதி | திண்டுக்கல் நெய் நிறுவன நிறுவனர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனர் உள்பட நான்கு பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: நரேஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் தயார் செய்யும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு திருப்பதியில் அலுவலகம் அமைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

உச்சநீதிமன்றம், திருப்பதி லட்டு

சிபிஐ இணை இயக்குநர் வீரேஷ் பிரபு தலைமையில் நடந்த இந்த விசாரணையில், திண்டுக்கல்லைசட சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி உரிமையாளர் ராஜசேகரன், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விபின் குப்தா, போமில் ஜெயின் மற்றும் அபூர்வா சாவ்தா ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து இன்று கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.