திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் மலர் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயில் வளாகத்தில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் வீதி உலாக்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இருப்பவர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக ஆண்டு பிரமோற்சவம் கடந்த மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்றது.