திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளில், சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது நாளான்று காலை சிம்ம வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக, மனிதர்களிடம் உள்ள தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீதி உலா அரங்கேறியது. இந்நிகழ்ச்சியின் போது கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம் மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.