இந்தியா

திருப்பதி: கொரோனாவில் இருந்து மீண்ட 16 அர்ச்சகர்கள்

திருப்பதி: கொரோனாவில் இருந்து மீண்ட 16 அர்ச்சகர்கள்

webteam

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருப்பதியில் கொரோனாவின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அர்ச்சகர்கள் உட்பட 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இனதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயில் 17 அர்ச்சகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அதில் 16 அர்ச்சகர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு அர்ச்சகர் மட்டும் கடந்த 20-ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.