திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் மூடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி தெப்பக்குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று முதல் தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை வெளியேற்றி, மராமத்து பணி செய்து, புதிய தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. இதனால் தெப்பகுளத்திற்கு வெளியே பக்தர்கள் குளிக்க தற்காலிக குளியலறை அமைக்கப்பட்டுள்ளது.