இந்தியா

திருப்பதி உண்டியலில் 130 கிலோ தங்கம் காணிக்கை

திருப்பதி உண்டியலில் 130 கிலோ தங்கம் காணிக்கை

webteam

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 130 கிலோ தங்கம் மற்றும் 108 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பணம், நகை ஆகியவற்றை உண்டியல் காணிக்கை யாக செலுத்தி வருகின்றனர். காணிக்கைகளை கணக்கிடும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக தங்கம், பணம் ஆகியவற்றை எண்ணும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், 800 மூடைகளில் சேர்ந்த காணிக்கைளை தேவஸ்தான பணியாளர்களுடன், கல்லூரி மாணவர்களையும் நியமித்து எண்ணப்பட்டது. இதில் ஜூலை மாதம் மட்டும் 130 கிலோ தங்க நகை மற்றும் ரொக்கமாக 106 கோடி ரூபாய் காணிக்கையாக சேர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 108 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.