இந்தியா

திருப்பதி தரிசனத்தை எளிமையாக்கும் புதிய மொபைல் ஆப்

திருப்பதி தரிசனத்தை எளிமையாக்கும் புதிய மொபைல் ஆப்

webteam

தரிசனத்திற்கு முன் பதிவும் செய்யவும் காணிக்களை செலுத்தவும் திருப்பதி கோவில் நிர்வாகம் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

தெலுங்கு வருட பிறப்பையொட்டி யுகாதி நெய்வேத்தியம் படைத்து, இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவிந்தா - திருமலா திருப்பதி தேவஸ்தானம் (Govinda - Tirumala Tirupati Devasthanam) என்ற பெயரில் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி தரிசன டிக்கெட், அறைகள் ஆகிவற்றுக்கு முன் பதிவு செய்யலாம். மேலும் இ- உண்டி, இ- நன்கொடை செலுத்தும் வசதிகளும் உள்ளன.