* ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3.20 மணிக்கு ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது.
* மாலை 6.30 மணிக்கு பாலசோர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
* 5 நிமிடங்களுக்குப் பிறகு புறப்பட்ட ரயில் மாலை 6.50 மணிக்கு பனபன நிலையத்தைக் கடந்தது.
* துரதிர்ஷ்டவசமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 7 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
* தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயில் அதிவேகமாக மோதியது.
* பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
* கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. 7 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கின.
* இந்த கோர விபத்தில் 70 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர்.
* உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் ரயில்வே அமைச்சகத்தால் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
* விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.