viral video
viral video twitter
இந்தியா

ஓடும் ரயிலில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்... வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்?

Prakash J

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரௌனி - லக்னோ எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக வைரலாகும் அந்த வீடியோவில், மப்ளர் அணிந்து அமர்ந்திருக்கும் ஒரு பயணியின் கன்னத்தில் டிக்கெட் பரிசோதகர் அறைகிறார். தொடர்ந்து அவரை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால், அந்தப் பயணி இருக்கையைவிட்டு எழுவதாக இல்லை. ஆனாலும், அவரை எழுப்பும் முயற்சியிலேயே டிக்கெட் பரிசோதகர் செயல்படுகிறார். இறுதியில் அவரை வலுக்கட்டாயமாக இழுக்கும்போது அவரது மப்ளர் மட்டும் வருகிறது.

இதை எதிர்தரப்பில் இருந்து வீடியோ எடுக்கும் நபர், ‘ஏன் அவரை அடிக்கிறீர்கள்’ எனக் கேட்கிறார். அதைப் பார்த்துவிட்டும் அவர் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாய்ப் பரவி வருகிறது. டிக்கெட் பரிசோதகர் இப்படி, அந்தப் பயணியிடம் கடுமையாக நடந்துகொண்டதற்கு எந்தக் காரணமும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் நடைபெறுவது மட்டும் வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தற்போது அந்த டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.