இந்தியா

இடி மின்னலை மாநில பேரிடராக அறிவித்த கேரளா அரசு

இடி மின்னலை மாநில பேரிடராக அறிவித்த கேரளா அரசு

jagadeesh

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடி மின்னல் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை முதல் கேரளாவின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக் கூடுமென திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இடி மின்னலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும், சில நேரங்களில் இரவு முழுவதும் நீடிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இடி மின்னல் ஆபத்தானது என எச்சரித்துள்ள கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையம், இதை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. மக்கள் தங்கள் குழந்தைகளைப் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுமாறும் மொட்டை மாடியிலும் மரத்தடியிலும் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.