இந்தியா

மக்களிடம் வரவேற்பு பெறாத சிலிண்டர் மானியம் விட்டுக் கொடுப்பு திட்டம்

மக்களிடம் வரவேற்பு பெறாத சிலிண்டர் மானியம் விட்டுக் கொடுப்பு திட்டம்

Rasus

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை வேண்டாம் என எழுதிக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதிலும் 27 கோடியே 98 லட்சம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் உள்ள நிலையில், ஒரு கோடியே 3 லட்சம் இணைப்புகளில் மட்டுமே மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 2 கோடியே 14 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ள நிலையில், 6 லட்சத்து 53 ஆயிரம் இணைப்புகளுக்கு மட்டும் மானியம் வேண்டாம் என எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 52 லட்சம் இணைப்புகள் உள்ள நிலையில், 8 லட்சத்து 26 ஆயிரம் இணைப்புகளுக்கு மானியம் வேண்டாம் என எழுதி கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 2 கோடியே 88 லட்சம் இணைப்புகளில் 16 லட்சத்து 50 இணைப்புகளுக்கும், கர்நாடகாவில் ஒரு கோடியே 58 லட்சம் இணைப்புகளில் 7 லட்சத்து 36 ஆயிரம் இணைப்புகளுக்கும் மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 3 கோடியே 93 லட்சம் இணைப்புகளில் 12 லட்சத்து 61 ஆயிரம் இணைப்புகளும், குஜராத்தில் உள்ள ஒரு கோடியே 4 லட்சம் இணைப்புகளில் 4 லட்சத்து 51 ஆயிரம் இணைப்புகளுக்கும் மானியம் வேண்டாம் என விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.