இந்தியா

பஞ்சாப் குண்டுவெடிப்பு : தேசிய புலனாய்வு அமைப்பு விரைவு

webteam

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ராஜஸ்சான்ஸி கிராமத்தில் நிரன்கரி பவன் என்ற பிரார்த்தனை மண்டபம் ஒன்று உள்ளது. அங்கு சிலர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குண்டெறிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் பங்களிப்பு இருக்கலாம் எனவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் காவல்துறை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி சேனல்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், குண்டுவெடிப்பை தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அமைப்பு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.