இந்தியா

மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்..!

மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்..!

webteam

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மைசூருக்கு கொண்டுவரப்பட்ட மூன்று சிறுத்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆன் வான் டைக் சீட்டா மையத்திலிருந்து இரண்டு பெண் சிறுத்தைகளும் ஒரு ஆண் சிறுத்தையும் மைசூரில் உள்ள ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து சாமராஜேந்திர விலங்கியல் பூங்காவின் நிர்வாக இயக்குநர் அனில் குல்கர்னி கூறும்போது “ தென் ஆப்பிரிக்காவில் இருந்து 3 சிறுத்தைகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் வழியாக இந்தியாவிலுள்ள மைசூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுத்தைகள் உள்ள இரண்டு பூங்காவில் இதுவும் ஒன்றாகும். தற்போது இந்த பூங்காவில் ஐந்து சிறுத்தைகள் உள்ளன.

பூங்காக்கள் திறக்க அரசு அனுமதியளித்தவுடன், இந்தச் சிறுத்தைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனத் தெரிகிறது. உலக அளவில் மொத்தம் 7100 சிறுத்தைகளே உள்ள நிலையில் அதில் பெரும்பான்மையானவை ஆப்பிரிக்க நாட்டிலே உள்ளது” என்றார்.