இந்தியா

நேரத்தையே மாற்றி அமைக்க விரும்பும் முதலமைச்சர்

webteam

அருணாச்சலப் பிரதேசத்திற்கு என்றே தனி நேரத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் பீமா கான்டு, கூறியுள்ளார்.

இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் எனப்படும் இந்திய நிலை நேரம்தான் அருணாச்சலப் பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நேரத்தைக் கடைப்பிடித்தால் பகலில் பல மணி நேரம் வீணாகிறது என்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் கூறியிருக்கிறார். அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்குமே தனியாக நேர அளவை பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “காலை 4:00 மணிக்கே இங்கு சூரிய வெளிச்சம் வந்துவிடுகிறது. ஆனால் அரசு அலுவலகங்கள் காலை 10:00 மணிக்குதான் தொடங்குகின்றன. மாலை 5 மணிக்கெல்லாம் இருட்டி விடுவதால் மாலை 4:00 மணிக்கெல்லாம் வேலையை முடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய நேரத்திலிருந்து அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் முன்னால் உள்ள நேர அளவைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் பிறபகுதிகள் கிரீன்விச் கோட்டிலிருந்து ஜி.எம்.டி+6 நேர அளவைக் கோட்டில் உள்ளது. ஆனால் வடகிழக்கு மாநிலங்கள் ஜி.எம்.டி+5.5 என்ற நேர அளவைக் கோட்டில் உள்ளது” என்றார்.

பீமா கான்டு சொன்னபடி நேர அளவு ஒரு மணி நேரம் முன்னால் மாற்றப்பட்டால், நமக்கு காலை 6 மணிக்கு விடிகிறது என்றால், அவர்களுக்கு 5 மணிக்கே விடிந்து விடும். அதாவது நமது கடிகாரத்தில் 6 மணி காட்டும் போது அவர்களின் கடிகாரத்தில் 5 மணி எனக் காட்டும்.