பீகாரின் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது “இதுதான் என்னுடைய கடைசி தேர்தல்” என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
பீகாரின் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, ஏற்கனவே இரண்டுகட்ட தேர்தல்கள் பீகாரில் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்ட தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது, இறுதிகட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெற உள்ளது.
இன்று இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில், பூர்னியாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய ஜக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், “ இதுதான் என்னுடைய கடைசி தேர்தல்” என்று கூறியுள்ளார். பீகாரில் கடந்த 15 ஆண்டுகளாக நிதீஷ்குமார் முதலமைச்சராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை நிதீஷ்குமார், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறார், இவருக்கு கடும் போட்டியாக லல்லுபிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் களத்தில் இருக்கிறார்.