இந்தியா

இந்தியாவின் தூய்மையான நகரம் எது தெரியுமா? - தொடர்ந்து 4வது முறையாக முதலிடம்

இந்தியாவின் தூய்மையான நகரம் எது தெரியுமா? - தொடர்ந்து 4வது முறையாக முதலிடம்

rajakannan

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டு வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமையை இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதேபோல், கொல்கத்தா நகரம் தூய்மையில் மிகவும் பின் தங்கியுள்ளது.

10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களின் பட்டியலில் போபால் முதல் காலாண்டில் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது காலாண்டில் ராஜ்கோட் இரண்டாம் இடம் பிடித்தது. முதல் காலாண்டில்( ஏப்ரல் - ஜூன்) நேவி மும்பை இரண்டாவது இடத்தையும், சூரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இரண்டாவது காலாண்டில், வதோதரா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

தூய்மை நகரங்களின் பட்டியலில் டெல்லியும் பின் தங்கியுள்ளது. டெல்லி பின் தங்கியுள்ளதற்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.