இந்தியா

’பைனல் மேட்சில் ஜனநாயகம் மலரும் அறிகுறி இது’: தேர்தல் முடிவு பற்றி மம்தா பானர்ஜி

’பைனல் மேட்சில் ஜனநாயகம் மலரும் அறிகுறி இது’: தேர்தல் முடிவு பற்றி மம்தா பானர்ஜி

webteam

அடுத்த ஆண்டு நடக்கும் பைனல் மேட்சில் (நாடாளுமன்ற தேர்தல்) ஜனநாயகம் மலருவதற்காக அறிகுறியைதான் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காண்பிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “ பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்து இருக்கிறார் கள். இது மக்களின் தீர்ப்பு. நாட்டு மக்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி இது.

அதோடு, அநீதி, அராஜகம், அரசு நிறுவனங்களை அழித்தல், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துதல், ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தலித், எஸ்சி, எஸ்டி பிரிவினர், சிறுபான்மையினர் என யாருக்கும் நல்லதை செய்யாமல் இருந்தவர்களுக்கு எதிரான வெற்றி. 

மக்களவைத் தேர்தலுக்கான, அரையிறுதியான இத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் பாஜக இல்லை. 2019-ம் ஆண்டு பைனல் மேட்ச்சில், ஜனநாயகம் மலரும் என்பதற்கான உண்மையான அறிகுறி. மக்கள் ஆட்டநாயகன் விருதை ஜனநாயகத்துக்கு  அளித்துள்ளார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.