இந்தியா

’அப்படியே பழகிட்டேன்’: 40 வருடமாக கண்ணாடிகளை சாப்பிடும் வழக்கறிஞர்- வீடியோ

webteam

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கடந்த 40, 45 வருடமாக கண்ணாடித் துண்டுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் சாஹூ. வயது 60.  இவர் சிறு வயதில் இருந்தே கண்ணாடித் துண்டுகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார். கடந்த 40 வருடங்களாக இதை சாப்பிட்டு வரும் சாஹூ, இதனால் தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார். ஆனால் மற்றவர்களை சாப்பிடுமாறு வற்புறுத்த மாட்டேன் என்கிறார் சிரித்துக்கொண்டே.அவர் கூறும்போது, ‘’சிறு வயதில் எதையாவது செய்ய வேண்டும் என்று கண்ணாடித் துண்டுகளை வாயில் போட்டு சவைக்க ஆரம்பித்தேன். அது பழகிவிட்டது. இப்போது விடமுடியவில்லை. இது உண்மையிலேயே உடலுக்கு ஆபத்தான ஒன்று.  யாரும் இதை பின்பற்ற வேண்டாம். இதைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை பாதிப்பில்லை என்றாலும் பற்கள் பாதிப்படைந் துள்ளன. எனது குடும்பத்தினருக்கும் இது தெரியும். திருமணமான புதிதில், என் மனைவி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந் தாள். கடந்த 40, 45 வருடங்களாக இதை சாப்பிட்டு வருகிறேன். இப்போது குறைத்துவிட்டேன்’’ என்றார் சாஹூ.

இவரது இந்த வித்தியாசமான பழக்கத்தை அக்கம் பக்கத்தினர் வேடிக்கையாக பார்த்து செல்கின்றனர்.